அமெரிக்காவில் சாதி வெறி? சிஸ்கோ நிறுவனம், ஊழியர்கள் மீது கலிஃபோர்னியா அரசு வழக்கு!

அமெரிக்காவில் பிரபலமான சிஸ்கோ நிறுவனத்தில் சாதியைக் காட்டி அவதூறாக நடத்தியதாகவும், உரிய பதவி உயர்வு, சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்றும் கலிஃபோர்னியா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் எண்ணற்ற இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வளைகுடாப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் இந்தியர்கள் இல்லாத நிறுவனமே கிடையாது என்ற அளவுக்கு இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் நிரம்பி வழிகின்றனர். சான் ஓசே நகரில் அமைந்துள்ள சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில்
 

அமெரிக்காவில் சாதி வெறி? சிஸ்கோ நிறுவனம், ஊழியர்கள் மீது கலிஃபோர்னியா அரசு வழக்கு!அமெரிக்காவில் பிரபலமான சிஸ்கோ நிறுவனத்தில் சாதியைக் காட்டி அவதூறாக நடத்தியதாகவும், உரிய பதவி உயர்வு, சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்றும் கலிஃபோர்னியா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கலிஃபோர்னியாவின் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் எண்ணற்ற இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வளைகுடாப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் இந்தியர்கள் இல்லாத நிறுவனமே கிடையாது என்ற அளவுக்கு இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் நிரம்பி வழிகின்றனர்.

சான் ஓசே நகரில் அமைந்துள்ள சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 2015ம் ஆண்டு, முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார், பெயர் குறிப்பிடப்படாத பாதிக்கப்பட்ட நபர். அதே அலுவலகத்தில் பொறியாளர் மேலாளர்களாக சுந்தர் அய்யர் மற்றும் ரமண கொம்பெல்லா பணிபுரிந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தலித் என்பதால், மேலாளர்கள் இருவரும் அவரை சாதி அடிப்படையில் மிகவும் கீழாக, சாதி பாகுபாட்டுடன் நடத்தி துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து 2016ம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். அதற்கு சுந்தர் அய்யர் வேறு வகையில் பழி தீர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சாதி அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது சட்டப்படி குற்றம் இல்லை என்று சிஸ்கோ நிறுவனம் தெரிந்து கொண்டதாம்! பாதிக்கப்பட்ட நபரை தனிமைப் படுத்தி, சம்பள உயர்வையும் மாற்றுப் பணிக்கான வாய்ப்பையும் தடுத்துள்ளதாகவும், இரண்டு தடவை பதவி உயர்வு தடுக்கப்பட்டதாகவும் கலிஃபோர்னியா Department of Fair Employment and Housing துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிஸ்கோ தரப்பில் இந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறியிருக்கிறார். சுந்தர் அய்யர், ரமணா கொம்பெல்லா தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப் பட்டுள்ளார்களா என்று இது வரையிலும் தெரியவில்லை.

அமெரிக்காவில் இந்தியர்கள் ஒருவர் மீது மற்றொருவர் , பணிபுரியும் அலுவலகத்தில் சாதித் தீண்டாமை கடைப்பிடித்ததாக வழக்கு தொடரப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் FANG என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் நிறுவனங்களில் பணிக்கு இண்டர்வியூ செய்யும் போதே இந்தியாவில் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் அனைவருக்கும் பரவலாக கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெற்றதால், தமிழ்நாட்டிலிருந்து தான் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் அமெரிக்காவுக்கு செல்ல முடிந்துள்ளது என்றும், பிற மாநிலங்களிலிருந்து பெரும்பாலும் உயர்வகுப்பினரே அமெரிக்காவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் பிற சாதியினருக்கு கல்வி வாய்ப்பு இல்லாததாலேயே புலம்பெயர் தொழிலாளர்களாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது, தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலிருந்து,  அமெரிக்காவில் குறைந்தபட்சம் ஒருவராவது இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

A1TamilNews.com

From around the web