பிஎம்கேர் விவகாரம்! சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு!!

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் காவல் நிலையத்தில் கே.வி.பிரவின்குமார் என்பவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக அமைக்கப்பட்ட பிஎம்கேர் நிதியமைப்பில் நன்கொடையாக வந்துள்ள நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக சோனியா காந்தி ட்விட்டர் மூலம் விமர்சித்துள்ளார். இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் முயற்சி, அடிப்படை ஆதாரமற்ற தகவல். இதை வெளியிட்ட சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,” என்று
 
பிஎம்கேர் விவகாரம்! சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு!!
Congress President Sonia Gandhi with former prime minister Manmohan Singh and Rahul Gandhi at a function in connection with a signature campaign for the ‘Special Status to the State of Andhra Pradesh’ organised by Andhra Pradesh Congress Committee, at AICC headquarters in the Capital on Wednesday—–The Statesman——16–03–16

ர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் காவல் நிலையத்தில்  கே.வி.பிரவின்குமார் என்பவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மீது புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில்,  “கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக அமைக்கப்பட்ட பிஎம்கேர் நிதியமைப்பில் நன்கொடையாக வந்துள்ள நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக சோனியா காந்தி ட்விட்டர் மூலம் விமர்சித்துள்ளார்.

இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் முயற்சி, அடிப்படை ஆதாரமற்ற தகவல். இதை வெளியிட்ட சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சோனியா காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153, 505(1)(பி) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் சாகர் காவல் நிலைய போலீசார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தினருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதை இந்தச் சட்டப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன.

சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் தலைமையில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web