தெலங்கானா என்கவுன்ட்டர்.. விரையும் தேசிய மனித உரிமை ஆணைய குழு!

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவினர் ஐதராபாத் சென்றடைந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர், நேற்று அதிகாலை காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்த்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து
 

தெலங்கானா என்கவுன்ட்டர்..  விரையும்  தேசிய மனித உரிமை ஆணைய குழு!

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவினர் ஐதராபாத் சென்றடைந்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர், நேற்று அதிகாலை காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்த்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேரில் விசாரணை நடத்த புலனாய்வுத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர், ஐதராபாத் சென்றடைந்தனர். இவர்கள் என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பகுதியான சட்டப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கும் செல்கின்றனர். இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் மீதும், போலீசாரைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 4 பேரின் உடல்களும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது.

https://www.A1TamilNews.com

From around the web