குழந்தைகளுக்கு சத்து தரும் கேரட் சாமை தோசை!

தேவையான பொருட்கள் சாமை – 100 கிராம் புழுங்கலரிசி – 100 கிராம் உளுந்து – 50 கிராம் வெந்தயம் – 1 டீஸ்பூன் கேரட் – 2 தயிர் – 1 ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கேரட்டை நன்றாக கழுவி, தோல் சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சாமை, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, நல்ல
 

குழந்தைகளுக்கு சத்து தரும் கேரட் சாமை தோசை!தேவையான பொருட்கள்
சாமை – 100 கிராம்
புழுங்கலரிசி – 100 கிராம்
உளுந்து – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கேரட் – 2
தயிர் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
கேரட்டை நன்றாக கழுவி, தோல் சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சாமை, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, நல்ல தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் இதனுடன்  நறுக்கிய கேரட்டைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் தயிர் கலந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இப்போது, தோசைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். நன்றாக மொறுமொறுப்பான தோசை தயார்.

இட்லி, இடியாப்பம் போன்றவற்றைத் தவிர்த்து தோசையை மட்டுமே விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளுக்கு சத்தான உணவாக இந்த சாமை தோசை இருக்கும். கூடுதலான விஷயம், இந்த மாவை தயிர் சேர்த்துத் தயாரிப்பதால், தனியாக மாவைப் புளிக்க வைக்க வேண்டிய தேவையில்லை.

A1TamilNews.com

From around the web