கனடாவில் சட்டப்பூர்வமாகும் மாரிஜுவானா! போதைப் பொருளை அங்கீகரிக்கும் முதல் ஜி7 நாடு..

ஆடவா: கனடா பாராளுமன்ற செனட் அவை மாரிஜுவானா போதை பொருளுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சட்டச்சிக்கல் நீங்குவதால், விரைவில் நாடு முழுவதும் மாரிஜுவானா போதைப் பொருள் அதிகாரப் பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது. பணக்கார நாடுகளான ஜி7 நாடுகளில் மாரிஜுவானாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் முதல் நாடாகவும் கனடா புகழ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். சட்டப்பூர்வமாக ஆக்குவதன் மூலம், சிறுவர்களுக்கு
 
ஆடவா: கனடா பாராளுமன்ற செனட் அவை மாரிஜுவானா போதை பொருளுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சட்டச்சிக்கல் நீங்குவதால், விரைவில் நாடு முழுவதும் மாரிஜுவானா போதைப் பொருள் அதிகாரப் பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது.
 
பணக்கார நாடுகளான ஜி7 நாடுகளில் மாரிஜுவானாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் முதல் நாடாகவும் கனடா புகழ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். சட்டப்பூர்வமாக ஆக்குவதன் மூலம், சிறுவர்களுக்கு மாரிஜூவானா கிடைப்பதை தடுக்க முடியும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் லாபம் கிரிமினல்களுக்கு கிடைக்காமல் செய்ய முடியும் என்று ட்ரூடோ கூறியுள்ளார்.
 
உற்பத்தி தொடர்பான நெறிமுறைகளை மத்திய அரசும், வினியோகம் தொடர்பான விவகாரங்களை மாநில அரசுகளும் கையாளும் என முடிவு செய்யப் பட்டுள்ளது. உலகில் முதல் முதலாக மாரிஜுவானாவை சட்டபூர்வமாக்கிய நாடு, தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே ஆகும். கனடா இரண்டாவதாக இடம் பெறுகிறது.
 

From around the web