ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பயனர்களை பின் தொடரும் பேஸ்புக்!!

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடர கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும் பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை
 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பயனர்களை பின் தொடரும் பேஸ்புக்!!

 

யனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடர கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும் பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர்.

அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது.

அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பேஸ்புக்கில் லொகேஷனை பகிர்ந்துகொள்ளும் முறை ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் அறிய முடியும் என செனட் சபையில் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பயனர்களுடைய செல்போன் ஐபி முகவரியை வைத்து அவர்களுடைய லோகேஷனை பேஸ்புக் கண்டுபிடிக்கிறது. விளம்பர நோக்கத்திற்காகவே பயனர்களின் லொகேஷனை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்துக்கொள்வதாக செனட் அவையில் கடிதம் மூலம் பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.

போட்டோக்களில் டேக் செய்யப்படுவது, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதை செக் இன்னாக பதிவு செய்வது போன்றவற்றையெல்லாம் மீறி, பயனர்களின் ஐபி முகவரிக்குள் பேஸ்புக் ஊடுருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web