இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும்!தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாகக் காணப்படும் 25 மாவட்டங்களில் பேருந்து போக்கு வரத்து சேவை இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துக்
 

இன்று முதல் பேருந்துகள்  இயக்கப்படும்!தமிழக அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாகக் காணப்படும் 25 மாவட்டங்களில் பேருந்து போக்கு வரத்து சேவை இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அப்படியே தொடரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இயக்கப்பட சிறப்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 20 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

பெரிய வேன்களில் 7 பேர், பெரிய கார்களில் 3 பேர், சிறிய கார்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரே மாவட்டத்திற்குள் சென்று வர இபாஸ் தேவையில்லை. வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்லும் போது கட்டாயம் அரசின் இபாஸ் பெற வேண்டும்.

பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கோ, பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கோ பேருந்துகளை இயக்க அனுமதி கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web