ரயில்வே கேட்டில் நின்றுக்கொண்டிருந்த பேருந்து உருண்டு ஓடியதால் விபரீதம்!

ரயில் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் பின்னாள் உருண்டு ஓடிய விபத்தில், கார்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மிதி வண்டி சேதமானது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால், சத்திரப்பட்டி வழியாக ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ரெட்டியபட்டி, தொம்பக்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நகர பேருந்துகள் மலையடிப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று வழக்கம் போல பழைய பேருந்து நிலையத்தில்
 

யில் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் பின்னாள் உருண்டு ஓடிய விபத்தில், கார்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மிதி வண்டி சேதமானது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால், சத்திரப்பட்டி வழியாக ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ரெட்டியபட்டி, தொம்பக்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நகர பேருந்துகள் மலையடிப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று வழக்கம் போல பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெம்பக் கோட்டை செல்லும் அரசு நகர பேருந்து மலையடிப்பட்டி வழியாக சென்றுள்ளது. பேருந்தை சஞ்சீவி நாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். ரயில் கடப்பதற்காக, ரயில்வே கதவு மூடப்பட்டிருந்தது. எனவே கதவின் முன்பாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார்.

வண்டி நிறுத்தப் பட்ட பகுதியானது சாலையில் இருந்து சுமார் 8 அடி உயரமானது. ரயில் கடந்த பின்னர் ஓட்டுனர் வண்டியை இயக்கி உள்ளார். அப்போது பிரேக் பிடிக்காமல் போகவே, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பின்புறமாக உருண்டுள்ளது. இதனால் பேருந்தின் பின்புறம் நின்றிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது கார் உள்ளிட்ட 2 கார்கள், 3 பேர்களுடைய இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மிதி வண்டி விபத்தில் சிக்கி நொறுங்கியது.

உடனே அருகே இருந்த பொது மக்கள் பெரிய கற்களை சக்கரத்தின் பின்புறம் வைத்து பேருந்தை நிறுத்தினர். பின்னர் பேருந்தை இயக்க முடியாமல் போகவே, பொது மக்கள் இணைந்து பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

From around the web