இனி சோஷலிஸம் கிடையாது… – பிரேசிலின் புதிய அதிபர் அறிவிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் 33 ஆண்டு கால சோசலிஸம் முடிவுக்கு வந்துவிட்டதாக புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜேர் போல்சோனாரா (Jair Bolsonaro) அறிவித்துள்ளார். 1985-ம் ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு பிரேசிலில் முதல்முறையாக வலதுசாரி ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் பதவியை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சோசலிஸத்தின் பிடியிலிருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நமது தேசியக்கொடி மீண்டும் சிவப்பாக ஒருபோதும் மாறாது,” என்றார். பிரேசிலில் கடந்த அக்டோபரில்
 

இனி சோஷலிஸம் கிடையாது… – பிரேசிலின் புதிய அதிபர் அறிவிப்பு
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் 33 ஆண்டு கால சோசலிஸம் முடிவுக்கு வந்துவிட்டதாக புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜேர் போல்சோனாரா (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.

1985-ம் ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு பிரேசிலில் முதல்முறையாக வலதுசாரி ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் பதவியை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சோசலிஸத்தின் பிடியிலிருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நமது தேசியக்கொடி மீண்டும் சிவப்பாக ஒருபோதும் மாறாது,” என்றார்.

பிரேசிலில் கடந்த அக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா), இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

அமெரிக்காவை பின்பற்றி தனியார் மயத்தை ஊக்குவிப்பார் என்பதால் இடதுசாரிகளும், உலகிற்கு 25 சதவீதம் ஆக்சிஜினை வழங்கும் அமேசான் காடு பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் புதிய அதிபர் குறித்து கவலையடைந்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் ஜேர் போல்சோனாரா தீவிர பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை ஒருவர் கத்தியால் குத்தியதில் வயிற்றில் பலத்த காயமடைந்தார். இதற்கு பின்னர் போல்சோனாராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. தேர்தலில் 55% வாக்குகள் பெற்று வென்றார். இதையடுத்து பிரேசிலியாவில் புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றார்.

 

From around the web