வாய்ப்பை தவற விட்ட பிஜேபி! ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்!

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் இவற்றுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக தனியாகவே களத்தில் இறங்கியது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்தது. இக்கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று
 

வாய்ப்பை தவற விட்ட பிஜேபி! ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்!ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 81 தொகுதிகளில்  5 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் இவற்றுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக தனியாகவே  களத்தில் இறங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்தது. இக்கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று இருக்கிறது.

ஆளும் கட்சியான பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி பின்தங்கியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரனின் வெற்றிச் செய்தி கிடைத்ததும், அவர் வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆனந்தக் கூச்சலிட்டனர்

இதனால் ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது. தாம் முதல்வராக பதவியேற்ற பின் முதலமைச்சர் என்கிற நினைப்போடு பணியாற்றாமல் மண்ணின் மைந்தன் என்கிற எண்ணத்தோடு மக்களுக்கு சேவை செய்வேன் உறுதி படக் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வரும் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web