கர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் உள்ளாட்சியில் பாஜக படுதோல்வி..!

ஹைதராபாத்: கர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் 25 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக ஆதரவு பெற்ற நடிகை சுமலதாவும் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸும், மத சார்பற்ற ஜனதா தளமும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து உடனடியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வெற்றிகளைப் பெற்றது. 1221 வார்டுகளுக்கு நடைபெற்ற
 

கர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் உள்ளாட்சியில் பாஜக படுதோல்வி..!ஹைதராபாத்: கர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் 25 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக ஆதரவு பெற்ற நடிகை சுமலதாவும் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸும், மத சார்பற்ற ஜனதா தளமும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து உடனடியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வெற்றிகளைப் பெற்றது. 1221 வார்டுகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டிய்ட்ட காங்கிரஸ் கட்சி  509 வார்டுகளையும், மதசார்பற்ற ஜனதாதளம் 176 வார்டுகளையும் பெற்றுள்ளது.  சுயேட்சைகள் 160 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் பாஜகவுக்கு 366 வார்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தற்போது தெலங்கானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 538 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு 445 இடங்களும், காங்கிரஸுக்கு 75 இடங்களும் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. சுயேட்சைகள் 5 இடங்களை கைப்பற்றியுள்ளனர். 

மொத்தம் 5 ஆயிரத்து 816  ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது. அதில் 3 ஆயிரத்து 557 இடங்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும்.1377 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது. சுயேட்சைகளும் பிற கட்சியினரும் 636 இடங்களை வென்றுள்ளனர். பாஜகவுக்கோ 211 வார்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில்  தெலங்கானாவில் பாஜக 4 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸுக்கு 3, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 9, ஆல் இந்தியா மஜ்ஸிஸ் 1 வெற்றி பெற்று இருந்தார்கள். ஆனால் உள்ளாட்சியில் காங்கிரஸை விட மிகக் குறைவான இடங்களிலேயே  பாஜக வென்றுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

கர்நாடகாவிலும் தெலங்கானாவிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றுள்ளது. நாடுமுழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எந்திரத்தின் மூலம் நடந்தது. உடனடியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள தோல்வி இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– வணக்கம் இந்தியா

 

From around the web