‘நீட் மசோதாவுக்காக 12 தடவை லெட்டர் அனுப்பிட்டோம்.. இனிமே கோர்ட்டுக்குப் போவோம் – அமைச்சர் சி.வி.சண்முகம்!

சென்னை: நீட் தேர்வு விலக்க மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் கேட்டு மத்திய அரசுக்கு 12 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் நீட் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மீண்டும் 2 மசோதாக்களையும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில்
 
‘நீட் மசோதாவுக்காக 12 தடவை லெட்டர் அனுப்பிட்டோம்.. இனிமே கோர்ட்டுக்குப் போவோம் – அமைச்சர் சி.வி.சண்முகம்!சென்னை: நீட் தேர்வு விலக்க மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் கேட்டு மத்திய அரசுக்கு 12 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் நீட் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மீண்டும் 2 மசோதாக்களையும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பதிலளித்துப் பேசிய  அமைச்சர் சி.வி.சண்முகம், “இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. நீட் விலக்க மசோதாவை மத்திய அரசு ‘ரிஜெக்ட்’ செய்யவில்லை, ‘ரிட்டர்ன்’ தான் செய்துள்ளது. மீண்டும் ஒரு தடவை கடிதம் அனுப்புவோம். அதற்கும் பதில் அனுப்பவில்லை என்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விளக்கம் கேட்போம்,” என்று தேதிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்ததாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. “இது ஒரு முக்கியமான பிரச்சினை. உணர்வுபூர்வமான பிரச்சினை. தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்களுடைய நலன்கருதி எல்லோரும் ஒருமித்த கருத்தோடு, நாம் இந்த ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்திலே ‘நீட்’ தேர்வு இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலே தான், நாம் இவ்வளவு வாதங்களை எடுத்து வைத்து இருக்கிறோம். 

சட்டத்துறை அமைச்சர், என்ன காரணம் என்று தெரிந்தால் தான், அதை நிவர்த்தி செய்து மசோதாவை மீண்டும் அனுப்ப முடியும் என்கிறார்  மீண்டும் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றி அனுப்பினாலும் எந்த காரணமும் இல்லாமல் இதே மாதிரி ரிஜெக்ட் செய்தால் என்ன செய்ய முடியும்.

காரணம் என்னவென்று அவர்கள் தெரிந்த பிறகு தான், அந்த காரணத்தை நிவர்த்தி செய்து இந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பலாம். இப்பொழுது மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அதற்கும் பதில் வரவில்லை என்றால் சிறப்புக்கூட்டம் கூட ஒன்று கூட்டலாம். 

நம்முடைய மாணவர்களுடைய நலன் மீது உங்களுக்கு எப்படி அக்கறை இருக்கின்றதோ, அதே அக்கறை எங்களிடத்திலும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலே இருக்கின்ற மாணவர்களுடைய நலன் கருதி எடுக்க வேண்டிய முடிவு,” என்று பேசியுள்ளார்.

12 கடிதத்திற்கு பதிலளிக்காத மத்திய் அரசு பற்றி, அன்றாட நடப்புகளுக்கு உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொல்லப் போகிறார்?

– வணக்கம் இந்தியா

From around the web