அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை – இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு!

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணி வென்றது. அடுத்ததாக வந்த வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக பாஜகவினரிடம் இது குறித்து அதிமுக தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ஆதரவும் கோரவில்லை. அதனால் பாஜக
 

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணி வென்றது. அடுத்ததாக வந்த வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக பாஜகவினரிடம் இது குறித்து அதிமுக தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ஆதரவும் கோரவில்லை.

அதனால் பாஜக தரப்பில் விருப்ப மனு கோரப்பட்டு நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சரின் அறிவிப்பு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவுடன் சென்றால் கிடைக்கும் வாக்கும் கிடைக்காமல் போகிறது. ஆனால் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி தேவைப்படுகிறது என்ற நிலையில் அதிமுக இருக்கிறது. ஒரு வேளை பாஜகவுடன் தமிழ்நாட்டுக்கு வெளியே மட்டும் கூட்டணி என்று சொல்லியிருப்பார்களோ?

புதுச்சேரியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதிலும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது.

– வணக்கம் இந்தியா

 

From around the web