யானை படத்தில் பறவை இயக்குநர் பாச்சா பலிக்குமா?

புதுமுகங்களை வைத்து சுமாரான கதைகளையும் கொஞ்சம் அழகாக பிரசன்ட் பண்ணுவதில் கில்லாடி அந்த இயக்குநர். செல்லமாக பறவை இயக்குநர். விமர்சகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர். ஆனால் கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவதில் இயக்குநர் கில்லாடி என்பது பலருக்கும் தெரியாது. அது தனி கதை. விஷயத்துக்கு வருவோம்… இந்த பறவை இயக்குநர் முதன்முறையாக பெரிய ஹீரோ, பெரிய பேனர் என்று ஒல்லியை கில்லியடிக்கும் கனவோடு ரயில் படத்தை இயக்கினார். ஆனால் படம் ஜல்லியடியாகி, கிட்டத்தட்ட காறித்துப்பாத குறைதான்
 

புதுமுகங்களை வைத்து சுமாரான கதைகளையும் கொஞ்சம் அழகாக பிரசன்ட் பண்ணுவதில் கில்லாடி அந்த இயக்குநர். செல்லமாக பறவை இயக்குநர்.

விமர்சகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர். ஆனால் கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவதில் இயக்குநர் கில்லாடி என்பது பலருக்கும் தெரியாது. அது தனி கதை. விஷயத்துக்கு வருவோம்…

இந்த பறவை இயக்குநர் முதன்முறையாக பெரிய ஹீரோ, பெரிய பேனர் என்று ஒல்லியை கில்லியடிக்கும் கனவோடு ரயில் படத்தை இயக்கினார். ஆனால் படம் ஜல்லியடியாகி, கிட்டத்தட்ட காறித்துப்பாத குறைதான் பாக்ஸ் ஆபீசில்.

ஒரு புது இயக்குநரை விட கேவலமாக படமெடுத்திருந்தார் பறவை. அவரை இன்னும் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கின்றார்கள் வலைத் தள, சினிமா ஆர்வலர் குரூப்கள்.

ஆனால் இயக்குநரோ புலம்பிக்கொண்டிருக்கிறார் காரணம் ஒல்லி நடிகர். ‘அவர் தலையீடு அதிகமானதால் தான் கதையையே மாற்ற வேண்டியதாயிற்று. இனிமேல் பெரிய ஹீரோ பக்கம் போக மாட்டேன்’ என்று புலம்பி வருகிறாராம்.

புலம்பலோடு வாரிசு நடிகரை வைத்து யானை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் தயாராகி விட்டாராம். யானை படமே படு கேவலம்தான். ஹீரோயினும் காமெடியனும் சேர்ந்து படத்தைக் காப்பாற்றியிருந்தார்கள். இரண்டாம் பாகம் எப்படியோ… பார்க்கலாம்!

From around the web