பிகில் தீபாவளி, தர்பார் பொங்கல்! களைகட்டும் பண்டிகை திரைப்படங்கள்!!

சென்னை: தமிழ் சினிமாவில், திரைக்கு வரவிருக்கும் படங்களில் பிகிலும், தர்பாரும் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை பெற்றுள்ளன. பிகில் தீபாவளி, தர்பார் பொங்கல் என அப்படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும், பொங்கலும் முதன்மை வகிப்பவையாகும். அந்தப் பண்டிகை நாள்களில், முன்னணி நடிகர்களின் திரைபடங்கள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. அந்த வகையில், வரும் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகிலும், பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி
 

பிகில் தீபாவளி, தர்பார் பொங்கல்! களைகட்டும் பண்டிகை திரைப்படங்கள்!!சென்னை: தமிழ் சினிமாவில், திரைக்கு வரவிருக்கும் படங்களில் பிகிலும், தர்பாரும் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை பெற்றுள்ளன.

பிகில் தீபாவளி, தர்பார் பொங்கல் என அப்படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும், பொங்கலும் முதன்மை வகிப்பவையாகும். அந்தப் பண்டிகை நாள்களில், முன்னணி நடிகர்களின் திரைபடங்கள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.

அந்த வகையில், வரும் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகிலும், பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பாரும் திரைக்கு வருகின்றன. பிகில் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மேலோங்கிக்கொண்டே இருக்கிறது. அண்மையில் வெளிவந்த அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகி, ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன.

பிகில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆவல்களை வெளிப்படுத்தி வருவது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை நமக்கு கண்ணாடி போல காட்டுகிறது.

தமிழ் சினிமாவில் என்றுமே ரஜினியின் தர்பார் தான் என சொல்லும் வகையில் தர்பார் படம் தயாராகி வருகிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளிவரும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக, காவல் உடையில் மிடுக்காக தோன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள், படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் இந்தப் படத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ரஜினியின் காவல் அவதாரத்தை ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள். தர்பார் படத்தின் பாடல்கள் எப்போது வெளி வரும் என்பதே தற்போது ரசிகர்களின் ஹாட் டாபிக்காக உள்ளது.

பிகில் மற்றும் தர்பார் படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் புதிய உச்சங்களை எட்டியுள்ள நிலையில், இந்த திரைப்படங்கள் அவற்றை பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

– வணக்கம் இந்தியா

From around the web