தமிழ் சினிமாவை காப்பாத்துங்க! முதலமைச்சருக்கு பாரதிராஜா உருக்கமான கோரிக்கை!!

தமிழ் சினிமாத் துறையை காப்பாற்று வேண்டுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடமை என்று இயக்குனர் பாரதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தேனியில் தற்போது தங்கியிருக்கும் பாரதிராஜா வீடியோ மூலம் இந்த வேண்டுகோளை அனுப்பியுள்ளார். சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பிற்கு 60 பேர்கள் வரை பங்கேற்கலாம் என்று தளர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால் சினிமா படப்பிடிப்பு தொடங்குவது பற்றி எந்த உத்தரவும் இது வரையிலும் வரவில்லை. இந்நிலையில் சினிமா படப்பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா
 

தமிழ் சினிமாவை காப்பாத்துங்க! முதலமைச்சருக்கு பாரதிராஜா உருக்கமான கோரிக்கை!!மிழ் சினிமாத் துறையை காப்பாற்று வேண்டுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடமை என்று இயக்குனர் பாரதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தேனியில் தற்போது தங்கியிருக்கும் பாரதிராஜா வீடியோ மூலம் இந்த வேண்டுகோளை அனுப்பியுள்ளார்.

சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பிற்கு 60 பேர்கள் வரை பங்கேற்கலாம் என்று தளர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால் சினிமா படப்பிடிப்பு தொடங்குவது பற்றி எந்த உத்தரவும் இது வரையிலும் வரவில்லை.

இந்நிலையில் சினிமா படப்‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, 

”மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவின் சில பணிவான வேண்டுகோள்கள்.

மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சிறு தொழில்கள் முடங்கி விடக்கூடாது என்பதற்காகவும் அன்றாட வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பும் கடினமான முயற்சிகளையும் எங்களை பெருமைப்பட வைக்கிறது.

சின்னத்திரை தொழிலாளர்களுக்காக சில தளர்வுகளுடன் 60 பேர் பங்காற்றும் வகையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள்  பெருமைப் படுகிறோம். அதைப் போல் தமிழ் திரையுலகின் சினிமா மிகவும் முடங்கிப் போய் கிடக்கிறது. பல தொழிலாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்.

முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பணத்தை எப்படி மீட்டெடுப்பது என்ற கவலையில் உள்ளார்கள். வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் திரும்பக் கிடைக்குமா, சினிமா தொழில் நசிந்து போய்விடுமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

சினிமாவை காப்பது நம்முடைய கடமை. உங்களுடைய கடமை.பல தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பெருந்தன்மையுடன், சின்னத்திரைக்கு விதிமுறைகளை தளர்த்தி படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளீர்களோ, அதைப் போல் சினிமாவுக்கும், சிறு படங்களுக்கு நாங்கள் தொழில் தொடங்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

அரசின் விதிமுறைகள் கட்டுப்பாடுகளை நாங்கள் முறையாக செயல்படுத்துவோம்.இந்த தொழிலை கட்டிக்காப்பது உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் எங்களை மறுபடியும் இயங்க வைக்க முடியும். தமித் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக அன்புடன் இந்த கோரிக்கையை வைக்கிறோம். செய்வீர்கள், எங்களை மகிழ்விப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.

 

 

திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்விக்கான விடையை எதிர்நோக்கி கோடம்பாக்கத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள்.

A1TamilNews.com

From around the web