பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை! உருகும் பாக்யராஜ்..

பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் வயதான வேடத்தில் நடித்துள்ள பாரதிராஜாவுக்கு ஜோடியாக இளம்பெண் நட்சத்திரா நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து இருந்த முதல் மரியாதை படத்தில், வயதில் இளையவரான ராதா காதல் கொள்வது போன்ற கதை இருந்தது. அது கிராமத்தில் நடைபெறும் கதை. அதே போல் தான் வயதான பாரதிராஜா மீது காதல் கொள்கிறாராம் நட்சத்திரா. ஆனால் கதைக்களம் லண்டனில் நடைபெறுவது போல் அமைந்துள்ளது.
 

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை! உருகும் பாக்யராஜ்..பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் வயதான வேடத்தில் நடித்துள்ள பாரதிராஜாவுக்கு ஜோடியாக இளம்பெண் நட்சத்திரா நடித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து இருந்த முதல் மரியாதை படத்தில், வயதில் இளையவரான ராதா காதல் கொள்வது போன்ற கதை இருந்தது. அது கிராமத்தில் நடைபெறும் கதை.

அதே போல் தான் வயதான பாரதிராஜா மீது காதல் கொள்கிறாராம் நட்சத்திரா. ஆனால் கதைக்களம் லண்டனில் நடைபெறுவது போல் அமைந்துள்ளது. ஆனால் ப்ளாஷ் பேக் காட்சிகள் கிராமத்தில் இருப்பதாகத் தெரிகிறது. கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ஆசை வச்சேன் பாடலுக்கு கிராமத்தில் ஆட்டம் பாட்டம் போடுகிறார் நாயகி.

கிராமம் தொடங்கி லண்டன் வரை செல்லும் கதையாக இருக்கும் என்று நம்ப்படுகிறது. ஸ்டில்களில் விதவிதமான கோட்டு சூட்டுகளில் அசத்துகிறார் பாரதிராஜா.

இந்தப் படம் பற்றி இயக்குனர் கே.பாக்யராஜ், “எங்கள் குருநாதர் பாரதிராஜாவுக்கு வயது ஏற ஏற சினிமா மீதான காதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய இளைய தலைமுறையினருடன் போட்டிப் போட்டுக் கொண்டு படத்தை இயக்கியுள்ளார். மிகவும் சிறப்பான படமாக வந்துள்ளது மீண்டும் ஒரு மரியாதை,” என்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web