பாகுபலி வில்லன் ராணாவிற்கு ஆகஸ்ட் 8ம் தேதி திருமணம்!

தெலுங்கு தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், பாகுபலி பட வில்லனுமான ராணா 2010ல் ‘லீடர்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆனாலும் பாகுபலியில் நடித்த வில்லன் கதாபாத்திரம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். ஆரம்பங்களில் ராணாவிற்கும், அனுஷ்காவிற்கும் தான் காதல் என சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. ராணா, அனுஷ்கா இருவருமே அந்தத் தகவலை மறுத்தனர். அதன் பிறகு ராணா தமது இன்ஸ்டா மூலம் காதலி மிஹீகா புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்றும்
 

பாகுபலி வில்லன் ராணாவிற்கு ஆகஸ்ட் 8ம் தேதி திருமணம்!தெலுங்கு தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், பாகுபலி பட வில்லனுமான ராணா 2010ல் ‘லீடர்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆனாலும் பாகுபலியில் நடித்த வில்லன் கதாபாத்திரம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்.

ஆரம்பங்களில் ராணாவிற்கும், அனுஷ்காவிற்கும் தான் காதல் என சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. ராணா, அனுஷ்கா இருவருமே அந்தத் தகவலை மறுத்தனர்.

அதன் பிறகு ராணா தமது இன்ஸ்டா மூலம் காதலி மிஹீகா புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்றும் கூறியிருந்தார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தன.

இந்நிலையில், ராணா, மிஹீகா திருமணம் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி நடக்க இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பரபரப்பு தகவலால் ராணா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A1TamilNews.com

From around the web