கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களை வெறுக்காதீர்கள் – பீலா ராஜேஷ்!

கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களை மற்றவர்கள் வெறுக்க வேண்டாம். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்கு முன் வந்தால் தான் நோயை குணப்படுத்த முடியும் என்று பீலா ராஜேஷ் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கூடுதலாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின்
 

கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களை வெறுக்காதீர்கள் – பீலா ராஜேஷ்!கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களை மற்றவர்கள் வெறுக்க வேண்டாம். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்கு முன் வந்தால் தான் நோயை குணப்படுத்த முடியும் என்று பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கூடுதலாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை  91 ஆயிரத்து 851. அரசு கண்காணிப்பில் 205 பேர் உள்ளனர். 28  நாள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 19 ஆயிரத்து 60,” என்று தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஒரு மருத்துவரும் ஆவார்.  கொரோனோ  தொற்று ஏற்பட்டவர்களை மற்றவர்கள் வெறுக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளதை தமிழக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

A1TamilNews.com

From around the web