கர்நாடகா போலீஸின் அதிரடி கொரோனா அட்டாக்!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவை மீறி சாலைக்கு வரும் பொதுமக்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு புதிய யுத்தியை கையாண்டு வருகிறார்கள். பெங்களூரு நகரின் முக்கியச் சந்திப்புகளில் போலீசார் நின்று கொண்டு வாகனங்கள் ஓட்டி வருபவர்களை கொரோனா போல் ஹெல்மெட் அணிந்த போலீசார் விரட்டிச் சென்று, கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்வது போல் பயமுறுத்துகிறார்கள். ஒலிபெருக்கியில் போலீஸ் அதிகாரி, ”கொரோனா வைரஸ் எங்கே ஒளிந்து கொண்டிருக்குன்னு தெரியல்ல. வீட்டிலே இருங்கன்னா கேட்க மாட்டேங்குறாங்க. பைக்குலே, காரிலே
 

கர்நாடகா போலீஸின் அதிரடி கொரோனா அட்டாக்!ர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவை மீறி சாலைக்கு வரும் பொதுமக்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு புதிய யுத்தியை கையாண்டு வருகிறார்கள்.

பெங்களூரு நகரின் முக்கியச் சந்திப்புகளில் போலீசார் நின்று கொண்டு வாகனங்கள் ஓட்டி வருபவர்களை கொரோனா போல் ஹெல்மெட் அணிந்த போலீசார் விரட்டிச் சென்று, கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்வது போல் பயமுறுத்துகிறார்கள்.

ஒலிபெருக்கியில்  போலீஸ் அதிகாரி, ”கொரோனா வைரஸ் எங்கே ஒளிந்து கொண்டிருக்குன்னு தெரியல்ல. வீட்டிலே இருங்கன்னா கேட்க மாட்டேங்குறாங்க. பைக்குலே, காரிலே வந்து மத்தவங்களுக்கு கொரோனா வைரஸ் பரப்பி விட்டுடுறாங்க. அதோ பைக்கில் ஒருத்தர் வர்றாரு. அவரை கொரோனா வைரஸ் எப்படி ஒட்டிக்கொள்ளுதுன்னு பாருங்க,” என்று அறிவித்தவாறு உள்ளார்.

அந்த நேரத்தில் அங்கே கொரோனா ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டு இருந்த ஒரு போலீஸ்காரர் பாய்ந்து சென்று பைக்கில் பின்னால் ஏறிக்கொண்டு அவரை ஒட்டுவது போல் பாசாங்கு செய்கிறார். அப்போது இன்னொரு போலீஸ்காரர் சங்கு ஊதி, பைக்கில் வந்தவருக்கு உண்மையிலேயே கொரோனோ வந்துவிட்டதோ என்று பயம் காட்டுகிறார்.

ஒரு போலீஸ்காரர் எச்சரிக்க, இன்னொருத்தர் கொரோனாவாக பைக்காரர் மீது ஏறிப்பாய, இன்னொரு போலீஸ்காரர் சங்கு ஊத, அதைப் பார்க்கும் மத்தவர்களும் கிலி பிடித்து எஸ்கேப் ஆகிறார்கள். பிடிபட்ட பைக் காரரை பாக்கனுமே! 

பெங்களூரு ?‍♀ போலிஸ் – வேற லேவல் ?

Posted by Kumar Duraiswamy on Tuesday, March 31, 2020

கொரோனா நமக்கு வராது என்ற தைரியத்தில், 144 தடை உத்தரவை மீறி இந்தியச் சாலைகளில் வருபவர்கள், அமெரிக்கா எப்படி அல்லாடுகிறது என்பதை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தாவது திருந்துங்கள். ஆனானப்பட்ட நியூயார்க் நகரமே முடங்கி விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம். 

பாவம் போலீஸ்காரர்கள்.. அவர்களுக்கு வேலை கொடுக்காமல் வீட்டிலே அடங்கி இருங்களேன் மக்களே!

நன்றி : குமார் துரைசுவாமி

A1TamilNews.com

From around the web