மூன்றே வாரத்தில் திரும்பி வந்த ‘டிக் டாக்’.. கட்டுப்பாடுகளுடன் அனுமதித்த உயர்நீதிமன்றம்!

மதுரை: பாடல்கள், டயலாக்குகளுடன் செல்ஃபி வீடியோ எடுக்கும் வசதி கொண்ட டிக் டாக் மொபைல் ஆப்-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அனுமதி கொடுத்துள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்-க்கு தடை விதித்ததால், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் தளங்களிலிருந்து டிக் டாக் ஆப் நீக்கப்பட்டது. சிறுவர்களுக்கும் ஆபாச வீடியோக்கள் கிடைக்கும் வகையில் டிக் டாக் மொபைல் ஆப் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உயர்நீதிமன்றம் உடனடியாக தடை விதித்தது. டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் “18 வயதுக்கு
 

மதுரை: பாடல்கள், டயலாக்குகளுடன் செல்ஃபி வீடியோ எடுக்கும் வசதி கொண்ட டிக் டாக் மொபைல் ஆப்-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அனுமதி கொடுத்துள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்-க்கு தடை விதித்ததால், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் தளங்களிலிருந்து டிக் டாக் ஆப் நீக்கப்பட்டது.
 
சிறுவர்களுக்கும் ஆபாச வீடியோக்கள் கிடைக்கும் வகையில் டிக் டாக் மொபைல் ஆப் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உயர்நீதிமன்றம் உடனடியாக தடை விதித்தது. டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த மொபைல் ஆப்-ஐ டவுண்லோட் செய்ய முடியும். ஆபாச வீடியோக்கள் கண்காணிக்கப்படும். ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வீடியோக்கள் கவனிக்கப்படுகின்றன” போன்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன்லாலின் வாதத்தையும், உறுதிமொழியையும் கேட்ட  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் முன்னதாக விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
 
இந்தியாவில் மட்டும் சுமார் ஐந்தரை கோடி வாடிக்கையாளர்கள் டிக் டாக் மொபைல் ஆப் உபயோகித்து வருகிறார்கள்.
 
– வணக்கம் இந்தியா
 

From around the web