கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும்!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தொலைபேசி வாயிலாக மருத்துவ உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளிலும் தொற்றிலிருந்து பொதுமக்கள் தம்மை காத்துக் கொள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும்  விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும்!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!சென்னையில் கொரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தொலைபேசி வாயிலாக மருத்துவ உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளிலும் தொற்றிலிருந்து பொதுமக்கள் தம்மை காத்துக் கொள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதில், கொரோனா தொற்று தொடர்பான மண்டல வாரியான அவசரகால உதவி எண்களும், ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கும் மக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அவசர மருத்துவ உதவிக்கும், உளவியல் ஆலோசனைக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவி எண்களை அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web