துன்பங்களைத் துரத்தியடிக்கும் துர்க்கை வழிபாடு :

இறைவனைப் பிரார்த்திக்க எல்லா நேரமும் உகந்ததே. அவரின் அருட்கடாட்சம் அனைத்து நேரங்களிலும் கிடைக்கும் என்றாலும் நம் கர்ம வினைகளுக்கேற்ப வழிபாட்டு நேரத்தை சரியான நேரத்தில் செய்திட நம் வாழ்வின் இன்னல்கள் நீங்கி ,வளம் பெறலாம். ராகு காலத்தில் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவாள் அம்பிகை என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை துதித்தால் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் . ஞாயிறு : துர்க்கை அம்மன்
 

துன்பங்களைத் துரத்தியடிக்கும்  துர்க்கை வழிபாடு :

றைவனைப் பிரார்த்திக்க எல்லா நேரமும் உகந்ததே. அவரின் அருட்கடாட்சம் அனைத்து நேரங்களிலும் கிடைக்கும் என்றாலும் நம் கர்ம வினைகளுக்கேற்ப வழிபாட்டு நேரத்தை சரியான நேரத்தில் செய்திட நம் வாழ்வின் இன்னல்கள் நீங்கி ,வளம் பெறலாம்.

ராகு காலத்தில் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவாள் அம்பிகை என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை துதித்தால் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் .

ஞாயிறு :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் 4:30-6:00 மணிக்குள் விளக்கேற்றி ,சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

திங்கள் :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொரு திங்கட் கிழமை காலை 7:30- 9:00 மணிக்குள், வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்யம் செய்திட கல்வியில் சிறக்க கருணை காட்டுவாள் .

செவ்வாய் :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொருசெவ்வாய் கிழமை மதியம் 3:00- 4:30 மணிக்குள் விளக்கேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்திட மாங்கல்ய பலம் கூடும். குழந்தை வரம் கிடைத்திடவும் இந்தக் கிழமையில் வழிபடலாம்.

புதன் :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொரு புதன் கிழமை மதியம் 12:00 முதல் 1:30மணிக்குள் பஞ்சுத்திரியில் விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்திட அலுவலகத்தில் பதவி உயர்வு,தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

வியாழன் :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொரு வியாழக் கிழமை மதியம் 1:30- 3:00 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்திட நோய் நீங்கி, ஆரோக்கிய வாழ்க்கையை வரமளிப்பாள்.

வெள்ளி :
துர்க்கை அம்மன் சந்நிதியில் ஒவ்வொரு வியாழக் கிழமை காலை 10:30- 12:00 மணிக்குள் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்திட திருமணத்தடை நீங்கி மங்கள வாழ்வு பெறுவார்கள்.

சனி :
துர்க்கை அம்மன் சந்நிதியில் சனிக் கிழமை காலை 9:00 – 10.30 மணிக்குள் மஞ்சள் துணித்திரியில் விளக்கேற்றி, காய்கறியுடன் சாதம் நைவேத்யம் செய்திட வேலைவாய்ப்பு, தொழிலில் மேன்மை அடையலாம்.

http://www.A1TamilNews.com

From around the web