வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்கள்! மாயமல்ல… அப்டேட்!!

மென்லோ பார்க்: அனுப்பப்படும் செய்தி குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தானாகவே அழியக்கூடிய புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை, ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளர் ஒருவர், மற்றொருவருக்கு தவறாக மெசேஜ் அனுப்பிவிட்டால் அதனை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. 7 நிமிடத்திற்குள்
 

வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்கள்! மாயமல்ல… அப்டேட்!!மென்லோ பார்க்: அனுப்பப்படும் செய்தி குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தானாகவே அழியக்கூடிய புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை, ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌அந்த வகையில் தற்போது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளர் ஒருவர், மற்றொருவருக்கு தவறாக மெசேஜ் அனுப்பிவிட்டால் அதனை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. 7 நிமிடத்திற்குள் டெலிட் செய்தால்தான் அதனை அழிக்கமுடியும் என தெரிவித்த வாட்ஸ் அதன்பின் ஒரு மணி நேரமாக தளர்த்தியது.

இந்நிலையில் தற்போது பயனாளர்கள் அனுப்பும் செய்தி, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐந்து விநாடி அல்லது ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஒரு செய்தி தானாகவே அழியும்.

தற்போது குரூப் மெசேஜ்க்கு மட்டுமே பொருந்தும் இந்த வசதி, நாளடைவில் பிரைவேட் மெசேஜ்க்கும் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி மூலம் காலவதியாகும் ஒரு செய்தி அல்லது இதற்கு மேல் தேவையில்லை என நினைக்கும் செய்தியை தானாகவே நீக்கிவிடலாம்.

உடனடியாகப் பகிரவும் என்ற அட்வைஸுடன், அதே அர்ஜெண்ட் மேட்டர் ஆண்டுக்கணக்கில் வந்து கொண்டிருப்பதையும் தானாகவே நீக்கிடுவீங்களா ’வாட்ஸ் அப்’ மொதலாளி?

– வணக்கம் இந்தியா

From around the web