ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா? – குழப்பத்தில் ரசிகர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் விளையாட்டு போட்டிகளின் போது மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் வரும் 29ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் கொரோனா அச்சுறுத்தி வருவதால் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்
 

ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா? – குழப்பத்தில் ரசிகர்கள்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் விளையாட்டு போட்டிகளின் போது மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வரும் 29ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் கொரோனா அச்சுறுத்தி வருவதால் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் ஒன்று கூடாமல் போட்டிகளை நடத்துமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா – தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளன.

இந்நிலையில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளை கடைபிடிக்கவும், எந்தவொரு விளையாட்டு நிகழ்விலும் பொதுக்கூட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web