அசுரன் vs சங்கத் தமிழன் – அக்டோபர் 4ல் பலப்பரிட்சை!

சென்னை: கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படமும், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படமும் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. அசுரன் படத்தில் இளமையான மற்றும் நடுத்தர வயது வேடத்தில் தனுஷ் தோன்றுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களைச் சொல்லும் வரலாற்றுப் படமாகத் தெரிகிறது. சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதி தோற்றமும் வரலாற்றுப் படம் போலவே தோன்றுகிறது. பெயர் மட்டும் தான் சங்கத் தமிழனா என்று தெரியவில்லை.
 

அசுரன் vs சங்கத் தமிழன் – அக்டோபர் 4ல் பலப்பரிட்சை!

சென்னை: கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படமும், விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படமும் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

அசுரன் படத்தில் இளமையான மற்றும் நடுத்தர வயது வேடத்தில் தனுஷ் தோன்றுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களைச் சொல்லும் வரலாற்றுப் படமாகத் தெரிகிறது. சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதி தோற்றமும் வரலாற்றுப் படம் போலவே தோன்றுகிறது. பெயர் மட்டும் தான் சங்கத் தமிழனா என்று தெரியவில்லை.

தனுஷுடன் மஞ்சு வாரியார் ஜோடியாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி, சுப்ரமணிய சிவா, யோகிபாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளார்கள். வெற்றி மாறன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அசுரன் vs சங்கத் தமிழன் – அக்டோபர் 4ல் பலப்பரிட்சை!

சங்கத் தமிழன் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நாசர், சூரி, ஜான் விஜய் உடன் நடித்துள்ளார்கள். விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

இரண்டு படங்களும் பெரிய தயாரிப்பாளர்களின் படங்கள். தனுஷ், விஜய் சேதுபதி இருவருமே மாஸாகவும், க்ளாஸாகவும்  நடிப்பவர்கள். இரு முக்கியப் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், எந்தப்படத்திற்கு வசூல் கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

– வணக்கம் இந்தியா

 

From around the web