ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டம்! பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா பரவலால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் இதுவரை நர்மதா மற்றும் வெள்ளைப்புலியின் அடையாளங்களை கொண்டு அறியப்பட்டு வந்த ரேவா நகரம், இனி ஆசியாவின் மிகப்பெரிய சூரியஒளி மின்உற்பத்தி
 

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டம்! பிரதமர் மோடி!ந்தியாவில் கொரோனா பரவலால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் இதுவரை நர்மதா மற்றும் வெள்ளைப்புலியின் அடையாளங்களை கொண்டு அறியப்பட்டு வந்த ரேவா நகரம், இனி ஆசியாவின் மிகப்பெரிய சூரியஒளி மின்உற்பத்தி திட்டத்தின் மூலம் அறியப்படும். இவை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு மாசற்ற, மலிவான மின்உற்பத்தியை மக்களுக்கு வழங்க இருக்கிறது.

சூரியஒளியில் தயாரிக்கப்படும் மின்சாரமானது மத்தியபிரதேச மாநிலத்துக்கு மட்டுமின்றி டெல்லி மெட்ரோ ரெயில் சேவைக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்உற்பத்தி துறையிலும் தன்னிறைவு பெறும் வகையில் இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web