அர்ஜென்டினாவில் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல்.. ஒர் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!

புவெனஸ் அய்ரஸ்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில், சிலே, நார்வே, ஃப்ரான்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பன்னாட்டுக் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பன்னாட்டு முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது அர்ஜென்டினா அரசு. அட்லாண்டிக் கடலில் 2600 அடி ஆழத்திற்கு கீழே தற்போது அந்த நீர் மூழ்கி கப்பலை கண்டெடுத்துள்ளனர்.
 
அர்ஜென்டினாவில் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல்.. ஒர் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!
புவெனஸ் அய்ரஸ்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில், சிலே, நார்வே, ஃப்ரான்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பன்னாட்டுக் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
பன்னாட்டு முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது அர்ஜென்டினா அரசு. அட்லாண்டிக் கடலில் 2600 அடி ஆழத்திற்கு கீழே தற்போது அந்த நீர் மூழ்கி கப்பலை கண்டெடுத்துள்ளனர்.
 
Comodoro Rivadavia துறைமுகத்திலிருந்து 600  கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடக்கும் இந்த கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான தொழில் நுட்பம் இல்லை ராணுவ அமைச்சர் கை விரித்துள்ளார். கப்பலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
 
கண்டெடுத்த தனியார் நிறுவனம்  கரைக்கு இழுத்து வரும் முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இரட்டை இலக்க பணவீக்கத்தால், கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அர்ஜென்டினா அரசு, இந்த கப்பலை கரைக்கு மீட்பதற்கு மிகப்பெரிய தொகையை கொடுக்க வேண்டியிருக்கும். பன்னாட்டு நிதியுதவியுடன் கப்பலை மீட்க முடியுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
 
ARA San Juan என்ற பெயரிடப்பட்ட இந்த நீர் மூழ்கி கப்பலில் மாலுமிகள் உட்பட 44 பேர் இருந்தனர். காணாமல் போன பகுதியிலிருந்து வெடிச்சத்தம் கேட்பதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாக் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் பற்றி கடைசித் தகவல் மாலுமியிடமிருந்து வந்தது. 
 
தென் அமெரிக்கா பகுதியில் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் பற்றி ஒராண்டாக நீடித்து வந்த மர்மம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த கப்பலை கரைக்கு மீட்க முடியுமா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
தொடர்பான முந்தைய செய்தி
 

From around the web