நாள் முழுவதும் மாஸ்க் போடறீங்களா?எச்சரிக்கை!

கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியில் சென்றாலே முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். ஆனால் நாள் முழுவதும் முகக்கவசம் அணிவதால் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்க்கை விடுத்துள்ளனர். நமது பாதுகாப்பிற்காக என்ற போதிலும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொண்டிருப்பதால் சரும எரிச்சல், சொரி ஏற்படலாம். இதனைக் குறைக்க மிகவும் இறுக்கமான மாஸ்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நம் சருமத்திற்கு கேடு விளைவிப்பவை இறுக்கமான முகக்கவசங்களே. முகக்கவசம் அணிந்திருக்கும் போது
 

நாள் முழுவதும் மாஸ்க் போடறீங்களா?எச்சரிக்கை!கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியில் சென்றாலே முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். ஆனால் நாள் முழுவதும் முகக்கவசம் அணிவதால் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்க்கை விடுத்துள்ளனர்.

நமது பாதுகாப்பிற்காக என்ற போதிலும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொண்டிருப்பதால் சரும எரிச்சல், சொரி ஏற்படலாம். இதனைக் குறைக்க மிகவும் இறுக்கமான மாஸ்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நம் சருமத்திற்கு கேடு விளைவிப்பவை இறுக்கமான முகக்கவசங்களே.

முகக்கவசம் அணிந்திருக்கும் போது முகத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை காரணமாகவே எரிச்சல் உருவாகிறது. மாஸ்க் அணிந்து வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். வாரம் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பதும் அவசியம்.

வெறும் வெந்நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத் துளைகளில் கண்ணிற்கு தெரியாமல் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறும். இதை சரியான முறையில் செய்து வந்தாலே முகப்பரு , கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

A1TamilNews.com

From around the web