கொரொனாவினால் சென்னையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதா?

மே மாதம் வரையிலும் உள்ள கணக்கெடுப்புகளின் படி சென்னை நகரில் கடந்த ஆண்டு அளவிற்கே மரணங்களின் எண்ணிக்கை பதிவாகி உள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 789 இறப்புகளும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 888 இறப்புகளும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆயிரத்து 754 இறப்புகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் 2018-ம் ஆண்டு மே மாதம் 5 ஆயிரத்து 146 இறப்புகளும், 2019-ம் ஆண்டு மே
 

கொரொனாவினால் சென்னையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதா?மே மாதம் வரையிலும் உள்ள கணக்கெடுப்புகளின் படி சென்னை நகரில் கடந்த ஆண்டு அளவிற்கே மரணங்களின் எண்ணிக்கை பதிவாகி உள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில்  2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 789 இறப்புகளும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 888 இறப்புகளும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆயிரத்து 754 இறப்புகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் 2018-ம் ஆண்டு மே மாதம் 5 ஆயிரத்து 146 இறப்புகளும், 2019-ம் ஆண்டு மே மாதம் 5 ஆயிரத்து 739 இறப்புகளும், 2020-ம் ஆண்டு மே மாதம் 4 ஆயிரத்து 532 இறப்புகளும் பதிவாகி உள்ளது. ஜூன் மாத தகவல்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை.

இந்த அடிப்படையில் பார்த்தால் மே மாதம் வரையிலும் சென்னையில் இறப்பு விகிதம், கொரோனா பரவலால் அதிகரிக்க வில்லை என்று தெரிகிறது. அதே வேளையில் ஜூன் மாத இறப்பு எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஜூன் மாதம் தான் கொரொனாவினால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல்கள் வந்தது.

அனைவரும் முகக்கவசம் அணிந்து, கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். விரைவிலேயே கொரோனாவை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்.

A1TamilNews.com

From around the web