நீதியை நிலை நாட்ட வாருங்கள் மக்களே! அமெரிக்காவில் அழைப்பு விடுத்த அறப்போர் ஜெயராம்!

பொது மக்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்காவில் விழிப்புணர்வு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அறப்போர் ஜெயராம் கூறியுள்ளார். அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் பங்கேற்ற மக்கள் நலன் நிகழ்ச்சி கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் நடைபெற்றது. ஃப்ரீமாண்ட் நகரில், இந்தியா மேம்பாட்டுச் சங்கமும் (AID-Association for India’s development), அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் (AKSC-Ambedkar King Study Circle-California Bay Area Chapter) கலிபோர்னியா வளைகுடாப்பகுதிப் பிரிவும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்
 

நீதியை நிலை நாட்ட வாருங்கள் மக்களே! அமெரிக்காவில் அழைப்பு விடுத்த அறப்போர் ஜெயராம்!பொது மக்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்காவில் விழிப்புணர்வு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அறப்போர் ஜெயராம் கூறியுள்ளார். அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் பங்கேற்ற மக்கள் நலன் நிகழ்ச்சி கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் நடைபெற்றது.

ஃப்ரீமாண்ட் நகரில், இந்தியா மேம்பாட்டுச் சங்கமும் (AID-Association for India’s development), அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் (AKSC-Ambedkar King Study Circle-California Bay Area Chapter) கலிபோர்னியா வளைகுடாப்பகுதிப் பிரிவும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயராம், நீதித்துறையின் தலையீடு மற்றும் பொது மக்களின் பங்களிப்பு இருந்தால் தான் நீதியை நிலை நாட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.

ஊழலை ஒழிப்போம்

அரசுத் துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு அலுவலகங்களில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளிக் கொண்டு வருவதற்காக அறப்போர் இயக்கம் செயல்பட்டு வருகிறது  என்று அதன் அமைப்பாளர் ஜெயராம் கூறினார். ஃப்ரீமாண்ட் நகர நிகழ்ச்சியின் போது ஜெயராம் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“அரசின் பல்வேறு துறைகள் மற்றும் துணை அமைப்புகளான லஞ்சஒழிப்பு – ஊழல் தடுப்புத் துறை (DVAC), ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ், நகராட்சி நிர்வாக மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளுக்கு அறப்போர் இயக்கம் தற்போதுள்ள அரசு சட்ட மற்றும் கட்டமைப்பிற்குள் அழுத்தம் கொடுத்துக் கொண்டு செயல்படுகிறது. ஊழலை அம்பலப்படுத்துவற்கான ஆவணங்களைச் சேகரிப்பதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை டெண்டர் சட்டம் 1998 ஆகியவைகள் பயன்படுகிறது.

பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் அரசியல் பதாகைகள் காட்சிப் படுத்தப்படுதையும், அவற்றைக் நீக்குவதற்கு காவல் துறை மறுப்பதையும் எதிர்த்து முதல் பிரச்சாரம் இருந்தது. அதற்காக செயல்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. அதுவே அறப்போர் இயக்கம் தொடங்குவதற்கான வித்தாக அமைந்தது. பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி நீதிக்காகப் போராடுவதற்காக அறப்போர் இயக்கமாக நிறுவப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் முயற்சியால், பொது இடங்களில் அரசியல் பதாகைகளைத் தடைசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

டெண்டர் முறைகேடுகள்

அடுத்த கட்டமாக, சாலைகள் போடுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் முயற்சியில் இயக்கம் ஈடுபட்டது. ஒப்பந்தத்தின் படி, புதிய சாலை போடுவதற்கு முன்னதாக, அங்கு இருக்கும் பழைய சாலையை முற்றிலுமாக சுரண்டி நீக்க வேண்டும். நடைமுறையில் இது செய்யப் படவில்லை, இதன் விளைவாகத் தற்போதுள்ள சாலைகளுக்கு மேலேயே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே சமதளமாக இருந்த வீடுகளைக் காட்டிலும் சாலைகள் மிக உயர்ந்த மட்டத்தில் வந்து விடுகின்றது.வீடுகளின் இந்த தாழ்வு நிலையினால் மழை பெய்யும்போது வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

டெண்டர்களில், தற்போதுள்ள சாலையை அகற்றுவதற்கான தொகை, சந்தை விலையை விட மிகக் குறைவு என்றும், சாலையின் மேலே சாலை போடுவதற்கான தொகை சந்தை மதிப்பு தொகையை விட மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் சராசரி ஒட்டுமொத்த செலவு சந்தை மதிப்பு தொகைக்கு இணையாக ஆகிறது என்றும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது.

சாலை மேலே சாலை போடுவதற்கே அதிகப் பணம் தரப்படுவதால், பழைய சாலையை சுரண்டி நீக்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வருவதில்லை. வெவ்வேறு பிரதிநிதிகள் வெவ்வேறு பெயர்கள் மூலம் செயல்படும் ஒரே நபரால் இயக்கப்படும் நிறுவனங்களுக்கே ஒப்பந்தங்களை வழங்கும் ஒரு முறைகேடும் நடைபெற்று வருகிறது.

உதாரணமாக, கே.சி.பி பொறியாளர்கள், வர்தன் உள்கட்டமைப்பு மற்றும் கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகியவை வெவ்வேறு நிறுவன பெயர்களைக் கொண்டவை. ஆனால் ஒரே நபரால் இயக்கப்படுகின்றன. ஒப்பந்தங்கள் இந்த நிறுவனங்களுக்குள்ளாகவே தான் சுழற்றப் படுகின்றன இந்த நிறுவனங்கள் ஒரே ஐபி முகவரி (இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி) கொண்ட கணினியிலிருந்து டெண்டர்கள் சமர்ப்பிக்கின்றன. டெண்டர்களில் ரகசியத்தன்மையை மீறுவதை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது.

இறக்குமதி முறைகேடுகள்

இந்தோனேசியாவிலிருந்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (TNGDCL) நிலக்கரி வாங்கியதன் விளைவாக 17 முதல் 30 பில்லியன் இந்திய ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது (அமெரிக்க டாலர் 2.4 முதல் 4.2 மில்லியன்). பொதுமக்களின் துணையோடு அறப்போர் இயக்கத்தின் தீவிர தலையீட்டிற்குப் பிறகு ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது 2015 -2017 ம் ஆண்டுகளில் எந்த திடீர் சோதனைகளையும் நடத்தாத DVAC, அறப்போர் இயக்கத்தின் தலையீட்டிற்குப் பிறகு, பல்வேறு அரசு அலுவலகங்களில் 61 திடீர் சோதனைகளை நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் முறைகேடுகளைக் கண்டறிந்தார்கள்.

அறப்போர் இயக்கத்தின் முக்கியமான நோக்கம் ஒரு சமுதாயத்தை நியாயமான மற்றும் சமத்துவத்துடன் கட்டியெழுப்புவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் ஆகும்,” என்று ஜெயராம் விவரித்தார்.

 

இந்தியா மேம்பாட்டு சங்கத்தின் (AID-Association for India’s development) கலிபோர்னியா வளைகுடாப் பகுதிப் பிரிவைச் சேர்ந்த வித்யா பழனிசாமி வரவேற்றுப் பேசினார். .
அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் சேரன் நன்றி கூறினார். அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் செயலாளர் செல்வா ஜெயராம்-க்கு நினைவுப் பரிசு வழங்கினர். AID நிறுவனத்தின் செல்வி மதுரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

– கனகலட்சுமி, கலிஃபோர்னியா, யு.எஸ்.ஏ.

https://www.A1TamilNews.com

From around the web