ஏ.ஆர் ரஹ்மானை நெகிழ்ச்சியடையச் செய்த  கண் பார்வையற்ற சிறுமி!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் சக்கை போடு போட்டுள்ளது. இதுவரை சுமார் 3 மில்லியன் பார்வையாளர்கள் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்தப் பாடலை நேற்று கண் பார்வையற்ற சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். தொலைகாட்சி சேனல் ஒன்றில் நடத்தப்பட சரிகமபதநி நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர். அவர்
 

ஏ.ஆர் ரஹ்மானை நெகிழ்ச்சியடையச் செய்த  கண் பார்வையற்ற சிறுமி!விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்  “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில்  சக்கை போடு போட்டுள்ளது. இதுவரை சுமார் 3 மில்லியன் பார்வையாளர்கள் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில்  இந்தப் பாடலை நேற்று கண் பார்வையற்ற சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். தொலைகாட்சி சேனல் ஒன்றில் நடத்தப்பட சரிகமபதநி  நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர். அவர் பதிவு செய்த  பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று இரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனடியாக  படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும் சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web