ரஜினியின் பாபா படத்துக்கும் மோடி ஜி க்கும் தொடர்பு இருக்கா என்ன?

தன்னை வாழவைத்த தமிழ்நாட்டை வைத்து வைத்துச் செய்தாலும், மோடி ஏப்பம் விட்டால்கூட ஆளுக்கு முன்னாடி ஓடிப்போய் ”ஹேட்ஸ் ஆஃப் ஜீ. நியூ ஏப்பம் இஸ் பார்ன்,” என சொல்லுமளவுக்கு ரஜினிக்கு ஏன் மோடியை இவ்வளவு பிடிக்கிறது என இன்று புரிந்துகொண்டேன். பாபா படம் பார்த்திருக்கிறீர்களா? ரஜினியே கதை, திரைக்கதை எல்லாம் எழுதிய காவியம் அது. அதில் ரஜினிக்கு ஏழு வரங்கள் கிடைக்கும். ஆனால் ஊதாரியாகத் திரியும் தனக்கு ஏழு வரங்கள் கிடைத்துள்ளதை ரஜினி நம்ப மாட்டார். அது
 

ரஜினியின் பாபா படத்துக்கும் மோடி ஜி க்கும்  தொடர்பு இருக்கா என்ன?ன்னை வாழவைத்த தமிழ்நாட்டை வைத்து வைத்துச் செய்தாலும், மோடி ஏப்பம் விட்டால்கூட ஆளுக்கு முன்னாடி ஓடிப்போய் ”ஹேட்ஸ் ஆஃப் ஜீ. நியூ ஏப்பம் இஸ் பார்ன்,” என சொல்லுமளவுக்கு ரஜினிக்கு ஏன் மோடியை இவ்வளவு பிடிக்கிறது என இன்று புரிந்துகொண்டேன்.

பாபா படம் பார்த்திருக்கிறீர்களா? ரஜினியே கதை, திரைக்கதை எல்லாம் எழுதிய காவியம் அது. அதில் ரஜினிக்கு ஏழு வரங்கள் கிடைக்கும். ஆனால் ஊதாரியாகத் திரியும் தனக்கு ஏழு வரங்கள் கிடைத்துள்ளதை ரஜினி நம்ப மாட்டார். அது உண்மையிலே வேலை செய்யுமா என சோதித்துப் பார்க்க நினைப்பார். நாமாக இருந்தால் அந்த சோதனையைக் கூட உருப்படியான விஷயங்களில்தான் செய்வோம். 

ஆனால் ரஜினியோ, வானத்தில் பறக்கும் பட்டம் தன் மடிக்கு வரவேண்டும் என்பார். அப்படியும் நம்ப மாட்டார். இன்னொரு பட்டத்தையும் வரவைப்பார். அப்படியும் நம்பமாட்டார். ரம்யாகிருஷ்ணன் தன்னிடம் வந்து மணி கேட்க வேண்டும் என்பார். இப்படி வரங்களை வரிசையாக வீணடிப்பார். பார்க்கும் நமக்கே, “அட லூசுப்பயலே.. எங்ககிட்ட கொடுத்தா ஒழுங்கா யூஸ் பண்ணுவோமேடா…” என எரிச்சலாகத் தோன்றும்.

இந்த ரஜினியைப் போலத்தான் மோடியும். நேரு, இந்திரா, விபி.சிங், வாஜ்பாய், மன்மோகன் எல்லாம் பிரதமராக இருந்த ஒரு நாட்டுக்கு தான் பிரதமராக இருப்பதை அவரால் இன்னும் நம்பவே முடியவில்லை. மதவெறி பிடித்த மடப்பயல்களுக்குத்தானே அவரைப் பற்றி தெரியாது. ஆனால் அவருக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும் அல்லவா?

எனவே, ”என்னடா இது? ஒரு நாட்டுல நம்மளைக் கூட பிரதமர் ஆக்குவாய்ங்களா?” என அவர் மனம் நிதர்சனத்தை நம்ப மறுக்கிறது. அதனால்தான் அந்த அதிகாரத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத டீமானடைசேஷன் எல்லாம் அப்படியான ஒரு சோதனைதான். இதோ நேற்று, ”எங்க கைத்தட்டுங்க பாப்போம்,” என்றார். அது ஏகபோகமாக வொர்க் அவுட் ஆனது. வடநாடே தெருவில் இறங்கிக் குத்தாட்டம் போட்டார்கள். இப்போது அதைப்பார்த்து குதூகலமாகி ’இன்னும் கொஞ்சம் டீட்டேய்லா போயி பார்ப்போம்’ என்ற நினைப்பில் “9 மணிக்கு 9 நிமிஷத்துக்கு 9 தடவை…” என்றெல்லாம் ஏதேதோ சொல்லிவைத்திருக்கிறார்.

இது இதோடு நிக்காது. அவரை பதவியில் இருந்து இறக்கும்வரை தான் பதவியில் இருப்பதை அவர் நம்பவே போவதில்லை. உருப்படியாகவும் எதுவும் செய்யப்போவதில்லை. இப்படி தன் அதிகாரத்தைச் சோதித்துக்கொண்டேதான் இருப்பார். ஆனால் என்ன? பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதைப் போல, இந்த வடக்கன்கள் செய்த பாவம் நம் தலையிலும் வந்து விடிகிறது!!!

-டான் அசோக்

A1TamilNews.com

From around the web