13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்?

மதுரை: தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 13ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் 3 பேர் குழுவுடன் வந்திருந்தார். நேரில் ஆய்வு செய்த பின் அவர் கூறும் போது, “13ம் நூற்றாண்டுகளில் வட மாநிலங்களிலிருந்து இந்தி மொழி தமிழகத்தில் நுழைய முயன்ற போது, தற்போது உள்ள
 

13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்?

மதுரை: தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 13ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் 3 பேர் குழுவுடன் வந்திருந்தார்.

நேரில் ஆய்வு செய்த பின் அவர் கூறும் போது, “13ம் நூற்றாண்டுகளில் வட மாநிலங்களிலிருந்து இந்தி மொழி தமிழகத்தில் நுழைய முயன்ற போது, தற்போது உள்ள எதிர்ப்பு போலவே அப்போதும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடந்த 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்கிறோம். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை ஆவணப்படுத்தி ஆறு மாதங்களுக்குள் புத்தகமாக வெளியிட உள்ளோம்,” என்று தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

1937ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ராஜாஜி, பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. மறைமலை அடிகளார், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம், பெரியார் போன்ற தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து, நடராசன் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உயிர் துறந்தனர். சட்டம் திரும்பப் பெறப் பட்டது

1965லும் தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. 70 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. அப்போதைய பிரதமர் நேரு தலையிட்டு மாநில மொழிகள் நீடிக்கும் என்று உறுதி மொழி தந்தார்.

தற்போது தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் 13ம் நூற்றாண்டிலேயே இந்திக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கலாம் என்று கூறியிருப்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதாரங்கள் ஏதும் வெளிவருமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

6 மாத காலத்திற்குள் வெளிவரும் சாந்தலிங்கத்தின் மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளின் ஆய்வுப் புத்தகத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்.

– வணக்கம் இந்தியா

From around the web