காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சி.. பீகாரில் சீட்டுகளை அள்ளப் போகிறார்கள்!

டெல்லி: காங்கிரஸின் மெகா கூட்டணியில், பாஜக கூட்டணியை விட்டு விலகிய ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி சேர்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வஹா டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேல், பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்திஷ்ன் கோஹில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இதை அறிவித்தார். முன்னதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் சார்பில் உபேந்திரா, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக பாஜக
 
டெல்லி: காங்கிரஸின் மெகா கூட்டணியில், பாஜக கூட்டணியை விட்டு விலகிய ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி சேர்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வஹா டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேல், பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்திஷ்ன் கோஹில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இதை அறிவித்தார்.
 
முன்னதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் சார்பில் உபேந்திரா, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக   பாஜக அமைச்சரவையில் இருந்தார்.
 
பீகாரில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 31ல் வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி என பலமிக்க கூட்டணியாக பாஜகவுடன் மோதுகிறார்கள். 
 
பீகாரில் பெருவாரியான இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிகிறது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்க பீகாரின் வெற்றி காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
 
– வணக்கம் இந்தியா

From around the web