அந்தமான்,நிக்கோபர் தீவு கேபிள் மூலம் சென்னையுடன் இணைப்பு!மத்திய அரசு!

இந்திய எல்லையில் உள்ள தீவுகளில் அந்தமான் நிகோபர் தீவுகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியப் பெருங்கடலில் சிறு, சிறு தீவுகளாக எண்ணற்றத் தீவுகள் உள்ளன. இவற்றில் அந்தமான், நிக்கோபரில் உள்ள எட்டு தீவுகளுடன், கேபிள் மூலம் சென்னையை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி, நாளை மறுநாள் துவக்கி வைககிறார். இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்திய கடல் பகுதியில், இந்த கேபிள்
 

அந்தமான்,நிக்கோபர் தீவு கேபிள் மூலம் சென்னையுடன்  இணைப்பு!மத்திய அரசு!ந்திய எல்லையில் உள்ள தீவுகளில் அந்தமான் நிகோபர் தீவுகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியப் பெருங்கடலில் சிறு, சிறு தீவுகளாக எண்ணற்றத் தீவுகள் உள்ளன. இவற்றில் அந்தமான், நிக்கோபரில் உள்ள எட்டு தீவுகளுடன், கேபிள் மூலம் சென்னையை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி உள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி, நாளை மறுநாள் துவக்கி வைககிறார். இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்திய கடல் பகுதியில், இந்த கேபிள் செல்ல இருக்கிறது.

இந்த திட்டத்துக்கு, சென்னை -அந்தமான் நிகோபார் தீவுகளை குறிக்கும் வகையில், ‘கேணி’ என, பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் தீவுகளுக்கு வேகமான இணைய வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாக அந்தமானில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுப்பதற்காகவும் இணைய வசதியை ஏற்படுத்தி ரோந்துகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

சென்னையில் இருந்து, 2,200 கிமீ தூரத்திற்கு, பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கப்படும். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. இன்னும் 3ஆண்டுகளில், இந்த திட்டம் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web