நான் ஒரு ஐயங்கார்! பெரியார் இல்லையேல் எனக்கும் விடுதலை கிடைத்திருக்காது!!

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தபோது ராஜபக்சே செய்தது சரிதான் என்று பேசுவார்கள், திமுக எதிர்ப்பு என்று வந்தால் அய்யோ இலங்கையில் நம் தமிழ் சொந்தங்களை மறந்துவிட கூடாது என்று பேசுவார்கள். தண்ணி என்று சொன்னாலே சூத்திரப்பயன் மாதிரி பேசாத, தீர்த்தம்னு கேளுன்னு சொல்லுவாங்க. ஆனால், பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லிவிட்டார் என்று பேசுவார்கள். சத்வ, ரஜோ, தமோ என்று மூன்று வகையான குணங்கள் இருப்பதாகவும் அதில் நாமெல்லாம் சத்வ குணத்தை சார்ந்தவர்கள் என்றும் பீத்திக்கொள்வார்கள்
 

நான் ஒரு ஐயங்கார்! பெரியார் இல்லையேல் எனக்கும் விடுதலை கிடைத்திருக்காது!!லங்கையில் தமிழர்களை கொன்று குவித்தபோது ராஜபக்சே செய்தது சரிதான் என்று பேசுவார்கள், திமுக எதிர்ப்பு என்று வந்தால் அய்யோ இலங்கையில் நம் தமிழ் சொந்தங்களை மறந்துவிட கூடாது என்று பேசுவார்கள்.

தண்ணி என்று சொன்னாலே சூத்திரப்பயன் மாதிரி பேசாத, தீர்த்தம்னு கேளுன்னு சொல்லுவாங்க. ஆனால், பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லிவிட்டார் என்று பேசுவார்கள்.

சத்வ, ரஜோ, தமோ என்று மூன்று வகையான குணங்கள் இருப்பதாகவும் அதில் நாமெல்லாம் சத்வ குணத்தை சார்ந்தவர்கள் என்றும் பீத்திக்கொள்வார்கள் ஆனால் என்றைக்குமே வன்முறையின் பக்கமே நிற்பார்கள் வீட்டிலும் அப்படித்தான்.

வீட்டில் பறப்பயலே சூத்திர பயலே என்று பேசுவார்கள் சமூகவலைத்தளத்தில் நாம் இந்துக்கள் என்று பதிவிடுகிறார்கள்.

இவர்களின் இரட்டை வேடம் புரிய ஆரம்பித்தபோது சைவ சிந்ததாம் ஈர்த்தது பொன்னூலை கழற்றிவிட்டு பட்டைபோட துடங்கினேன். இப்படிதான் பட்டைபோட்டுக்கொண்டு ருத்திராட்சம் அணிந்து கல்யாண நிகழ்விற்கு சென்றபோது அத்தனை கேலிக்கு உள்ளானேன்.

இவன் என்ன இப்படி இறங்கிட்டான், தருத்ரம் புடிச்சவனாட்டோம். வீட்டில ஒரு தாத்தா டேய் நீ என்னடா கீழ எறங்கற, நம்மெல்லாம் நாராயணனை வழிபட்றவங்க, மகா பெரியவாளே நாராயண நாமம்தான் சொல்லுவாராம், நம்ம மேல இருக்கோம் என்று சொன்னார்.

யார் மேல இருக்கோம் யார் கீழே இருக்கோம் என்று யார் தாத்தா முடிவு செய்வது என்று சாதாரண கேள்விக்கே அவரு offend ஆயிட்டாரு…. உண்மையில் முருகனை எங்கள் வீட்டில் கீழே வைத்துதான் பார்ப்பார்கள். இப்போது அதே உறவினர்கள் முருகனை அவமதித்து விட்டார்கள் என்று பதிவிடும்போது எதற்காக இந்த இரட்டை வேடம்?

யாரை காப்பாற்ற இந்த வேடம்? ஏன் உண்மையை விட்டு அரை இன்ச் தள்ளியே நின்று கனவு உலகில் வாழ்ந்துகொண்டு நாங்கள்தான் அதி புத்திசாலி என்று வீண் பேச்சு பேசுகிறார்கள்?இப்படி வரலாற்றில் பச்சோந்தியாக ஒரு கூட்டத்தை பார்த்ததே இல்லை. இப்படி இயற்கைக்கு எதிரான கோட்பாடுகளும், மக்கள் விரோதமான எண்ணம் இருந்த எல்லா கூட்டமும் சுவடுகளே இல்லாமல் அழிந்ததுதானே வரலாறு..

என் சாதியை வெளியே சொல்வதின் நோக்கம் இந்த கூட்டத்தின் நேர்மையை பற்றி வெளியே சொல்லிக்கொண்டே இருப்பதின் தேவை இருக்கிறது

பி.கு. பெரியார் இல்லையேல் எனக்கும் விடுதலை கிடைத்திருக்காது. எத்தனை முறை அந்த கிழவனுக்கு நன்றி சொன்னாலும் போதாது.

– Aparajithan R

A1TamilNews.com

From around the web