ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு!!

 

ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி முதல் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனாவால் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றன.

ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு குரலும் ஒலித்தன.

இந்நிலையில் டோக்கியோவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பேசிய டெட்ராஸ் அதானம், ஒலிம்பிக் போட்டிகள் உலக நாடுகளை ஒருங்கிணைத்து, ஒற்றுமையை ஊக்குவிக்கும் தருணமாக இருக்கும் என்றார்.

கொரோனா பெருந்தொற்றை ஒருங்கிணைந்து உறுதியுடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், ஒவ்வொரு நாட்டிலும் 70 சதவீத மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.