கொரோனாவை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து உலக சுகாதார மையத் தலைவர் விளக்கம்!

உலக நாடுகள் அனைத்தியும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிலிருந்து மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்களை காத்துக் கொள்ளவும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி பொது இடங்களில் நிச்சயமாக தனி மனித இடைவெளியை
 

லக நாடுகள் அனைத்தியும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிலிருந்து மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்களை காத்துக் கொள்ளவும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி பொது இடங்களில் நிச்சயமாக தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சுகாதாரமான முறையில் தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும் அரசுகள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சீக்கிரமாக அடையாளம் காண்பதற்கு அரசுகள் இன்னும் தீவிரமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் முறையான சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வழிவகைகளை உருவாக்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், மற்ற உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், நீண்டகால நோய் பராமரிப்பில் வாழ்கிறவர்கள் என கொரோனா தொற்று பரவக்கூடிய கூடுதலான ஆபத்தில் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

புதிய கொரோனா வைரஸ் பற்றி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருப்பதால், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தலைவர் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com