‘ஃபாசிஸ்ட் பாஜக ஒழிக’ : சோபியா வுக்கு கனடாவில் பிரச்சனை ஆகுமா? #பாசிசபாஜகஒழிக!

தூத்துக்குடி : கனடாவின் மாண்ட்ரியால் நகரில் படித்து வரும் தூத்துக்குடி பெண் சோபியா தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனைப் பார்த்து ஃபாசிஸ்ட் பாஜக ஒழிக என்ற கோஷம் எழுப்பிய பிரச்சனையில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். விமானப் போக்குவரத்து விதிகளின் படி அப்படி கோஷம் எழுப்பலாமா கூடாதா என்று சட்ட வல்லுனர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது போன்ற சட்டவிதிகளின்படிதான் அவர் மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

 

தூத்துக்குடி : கனடாவின் மாண்ட்ரியால் நகரில் படித்து வரும் தூத்துக்குடி பெண் சோபியா தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனைப் பார்த்து ஃபாசிஸ்ட் பாஜக ஒழிக என்ற கோஷம் எழுப்பிய பிரச்சனையில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

விமானப் போக்குவரத்து விதிகளின் படி அப்படி கோஷம் எழுப்பலாமா கூடாதா என்று சட்ட வல்லுனர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது போன்ற சட்டவிதிகளின்படிதான் அவர் மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாஜக அரசை எதிர்த்து முழக்கம் எழுப்பியதால், இனி சோபியாவின் எதிர்காலம் இருண்டு விடும் என்று சமூகத் தளங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். சோபியா இன்னும் இந்தியக் குடிமகள் என்றே தெரிகிறது. ஆனாலும் கனடாவில் படிக்கும் மாணவி என்பதால் கனடா அரசு அவர் மீது கருணை காட்டும் வாய்ப்புள்ளது.

ஒரு வேளை அவருக்கு அரசியல் ரீதியாக இந்தியாவில் நெருக்கடி ஏற்படுமானால், கனடா நாட்டில் புகலிடம் கோர முடியும். புகலிடம் கோரி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் கனடா முன்னோடி நாடாக விளங்குகிறது.

சிரியா போரின் போது அகதிகளை அமெரிக்காவுக்குள் வர ட்ரம்ப் தடை விதித்த போது சிறப்பு கப்பல் அனுப்பி அவர்களை அழைத்து வந்தது கனடா அரசு. மனித உரிமைகளை காப்பதிலும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதிலும் கனடா உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகும்.

ஆளும் கட்சிக்கு எதிராக விமானப் பயணத்தின் போது கருத்து தெரிவித்தார் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக வேறு வகையில் சோபியா பழிவாங்கப் பட்டால், கனடா அரசு அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டும் என்றே தெரிகிறது.

சோபியாவின் சார்பில் அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு தகவல் அனுப்பினாலும், அவர்களும் சோபியாவுக்கு கனடா அரசாங்கம் மூலம் உதவிக்கரம் நீட்ட வாய்ப்புள்ளது.