WHO சீனாவின் கைப்பாவை என அமெரிக்கா நேரடிக் குற்றச்சாட்டு! உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா !

சீனாவில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவிலிருந்தே உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் மற்ற நாடுகளை எச்சரிக்கவும், பாதுகாக்கவும் தவறி விட்டதால் நிதி வழங்க முடியாது என ஏற்கனவே அமெரிக்கா கைவிரித்து விட்டது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்காக போராடி வரும் வேளையில் அமெரிக்கா கொரோனாவால் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின்
 

சீனாவில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவிலிருந்தே உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் மற்ற நாடுகளை எச்சரிக்கவும், பாதுகாக்கவும் தவறி விட்டதால் நிதி வழங்க முடியாது என ஏற்கனவே அமெரிக்கா கைவிரித்து விட்டது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்காக போராடி வரும் வேளையில் அமெரிக்கா கொரோனாவால் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதனால் ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீதும், உலகச் சுகாதார நிறுவனம் மீதும் தொடர்ந்து அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு என்பது உலக நாடுகளின் நலனைக் காக்கும் பொதுவான அமைப்பு.

பாரபட்சமின்றி வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் சீனாவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான தொடர்பை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com