கொரோனாவால் இந்தியாவின் நிலைமை தனது இதயத்தை உடைத்து விட்டது..! உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

 

கொரோனாவால் இந்தியாவின் நிலைமை தனது இதயத்தை உடைத்து விட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்நிலையில், கொரோனாவால் இந்தியாவின் நிலைமை தனது இதயத்தை உடைத்து விட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், முன்னரே தயாரிக்கப்பட்ட ஆய்வகப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் டெட்ராஸ் அதோனம் கூறியுள்ளார்.