விண்வெளியில் நடக்கவுள்ள சாதனைப் பெண்கள்!

விண்வெளி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே தனியாக விண்வெளியில் நடக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர் ஆகிய இரண்டு விண்வெளி வீராங்கனைகள், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு விண்வெளியில் நடக்கவுள்ளனர். இந்நிகழ்வு நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்துள்ள மின்கலன்களை மாற்றும் பணியில் ஈடுபடவுள்ள கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர், அதன்பின் விண்வெளியில் நடக்கவுள்ளனர். இதுவரை விண்வெளியில் 420 முறை
 

விண்வெளி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே தனியாக விண்வெளியில் நடக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர் ஆகிய இரண்டு விண்வெளி வீராங்கனைகள், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு விண்வெளியில் நடக்கவுள்ள‌னர். இந்நிகழ்வு நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்துள்ள மின்கலன்களை மாற்றும் பணியில் ஈடுபடவுள்ள கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர், அதன்பின் விண்வெளியில் நடக்கவுள்ளனர். இதுவரை விண்வெளியில் 420 முறை வீரர்கள் ‌நடந்துள்ளனர்.

இதுவே முதன்முறையாக பெண்கள் மட்டுமே தனியாக விண்வெளியில் நடக்கப் போகும் நிகழ்வாகும்.