மாற்றுத்திறனாளி நபரை தரதரவென இழுத்து கைது செய்த போலீசார்.. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்

 

அமெரிக்காவில் போதைபொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தில், கருப்பினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டேட்டன் நகரத்தில் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, கஞ்சா கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் சந்தேகத்தின்பேரில் ஒரு வெள்ளை நிற ஆடி காரை சாலையில் வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது அந்த காருக்குள் கறுப்பினத்தவரான கிளிஃபார்ட் ஒவென்ஸ்பி (வயது 39) இருந்துள்ளார். அந்த காரின் பின் இருக்கையில் அவரது மகன் இருந்துள்ளார்.

டேட்டன் போலீசார், ஒவென்ஸ்பி-யை விசாரிப்பதற்காக காரிலிருந்து கீழே இறங்க சொன்னார்கள். அனால், ஒவென்ஸ்பி ‘நான் பேராப்லேஜிக்.., என்னால் கீழே இறங்க முடியாதது’ என கூறியுள்ளார்.

அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத போலீசார், அவரை கீழே இறங்க சொல்லி வறுபுறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் உதவிக்காக தனதுதொலைபேசில் யாரையோ அழைத்துள்ளார்.

அவரிடம் சில முறை கேட்டுப்பார்த்த நிலையில், மூன்று போலீசார் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுத்தனர், அதில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒவென்ஸ்பியின் தலை முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளினார்.

‘நீங்கள் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்..,’ என கதறியபடி அவர் சாலையில் தள்ளப்பட்டார். மேலும் அங்கிருந்து அவரை தரதரவென இழுத்துவந்து போலீஸ் காருக்குள் கொண்டுசென்றனர்.

ஓவன்ஸ்பி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவென்ஸ்பி 2 முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கார் கண்ணாடிகள் டின்ட செய்யப்பட்டிருந்ததாகவும் மற்றும் அவரது மகன் கார் இருக்கையில் அமரவில்லை என்று இருவேறு குற்றச்சட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.

ஆனால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு ஓவன்ஸ்பி மீது குற்றம் சாட்டப்படவில்லை, என்று ஒவென்ஸ்பியின் வழக்கறிஞர் வில்லிஸ் கூறியுள்ளார்.

ஒவென்ஸ்பியின் பக்கவாதம் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறிய வில்லிஸ், எனது கட்சிக்காரர் ஆயிரக்கணக்கான டொலர்களை ரொக்கமாக வைத்திருப்பது குற்றம் அல்ல என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, கறுப்பினத்தனர் தாக்கப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.