ஐநா சபையில் உரை: நியூயார்க்கில் மோடி .. எதிர்ப்பும் ஆதரவும்!

நியூயார்க்: ஐநா பொது சபையில் உரையாற்ற வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் பெருந்திரளாக கூடியிருந்து முழக்கம் எழுப்பியுள்ளார்கள். காஷ்மீரில் இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மனித உரிமைக் குழுக்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் உள்பட பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் திரண்டு வந்திருந்து காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குரல் எழுப்பினார்கள். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும், பலர் கைக்குழந்தைகளுடன் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் எழுப்பியுள்ளார்கள். மனித
 

நியூயார்க்: ஐநா பொது சபையில் உரையாற்ற வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் பெருந்திரளாக கூடியிருந்து முழக்கம் எழுப்பியுள்ளார்கள்.

காஷ்மீரில் இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மனித உரிமைக் குழுக்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் உள்பட பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் திரண்டு வந்திருந்து காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குரல் எழுப்பினார்கள்.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும், பலர் கைக்குழந்தைகளுடன் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் எழுப்பியுள்ளார்கள்.

மனித உரிமைக்கான இந்துக்கள் (Hindus for Human Rights) என்ற அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா விஸ்வநாத் கூறுகையில், “இந்துக்கள் என்ற எங்கள் பெயரால் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க மாட்டோம். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்துக்கள்  தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பக்கம் பிரதமர் மோடியை வரவேற்று மேளதாளத்துடன், பிரதமர் மோடியின் ஆதரவாளர்களும் இந்திய தேசியக் கொடிகளை ஏந்தியபடி, ஆர்பரித்துக் கொண்டிருந்தார்கள். நியூயார்க் ஐநா சபை உள்ள சாலையில் போராட்டக்காரர்கள் மற்றும் மோடி ஆதரவாளர்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு வேறு யாரையும் அந்த சாலைக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.

நியூயார்க் நகர காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.