வெளிநாடு வாழ் தமிழர்களே.. இந்தியா வரும் முன் இதைப் பாருங்க!

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்தியப் பயணம் மேற்கொள்வதற்கு முன் OIC கார்டு மற்றும் பாஸ்போட் விவரங்களை சரிபார்க்குமாறு இந்திய தூதரகத்தின் சார்பில் கோரிக்கை விடப் பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வர இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களை விமானத்தில் ஏற விடாமல் தறுத்து நிறுத்தப் பட்டனர். வெளிநாடு வாழ் இந்தியருக்கான OIC (Overseas Citizenship of India) அட்டை இருந்த போதிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மெல்போர்னில்
 

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்தியப் பயணம் மேற்கொள்வதற்கு முன் OIC கார்டு மற்றும் பாஸ்போட் விவரங்களை சரிபார்க்குமாறு இந்திய  தூதரகத்தின் சார்பில் கோரிக்கை விடப் பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வர இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களை விமானத்தில் ஏற விடாமல் தறுத்து நிறுத்தப் பட்டனர்.  வெளிநாடு வாழ் இந்தியருக்கான OIC (Overseas Citizenship of India) அட்டை இருந்த போதிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“OIC கார்டில் உள்ள பாஸ்போர்ட் எண்ணுக்கும், தற்போதைய பாஸ்போர்ட் எண்ணுக்கும் வித்தியாசம் இருந்ததால், சில விமான நிறுவனங்கள் பயணிகளை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்த சம்பவம் குறித்து அறிந்தோம். அது குறித்து சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னால் கீழ்க்கண்டவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

20 வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஒவ்வொரு தடவை பாஸ்போர்ட் நீட்டிப்பு செய்து புது பாஸ்போர்ட் வாங்கும் போதும், புதிய OIC கார்டுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

21 முதல் 50 வயது நிரம்பியவர்களுக்கு ஒவ்வொரு தடவை பாஸ்போர்ட் நீட்டிப்பு விண்ணப்பிக்கும் போதும், புதிய OIC விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆனால் பயணத்தின் போது, புதிய பாஸ்போர்ட்டுடன் OIC  கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண் கொண்ட பழைய பாஸ்போர்ட்டையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

50 வயதைக் கடந்த பிறகு ஒரே ஒரு தடவை மட்டும் OIC கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பயணத்தின் போது OIC கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய பாஸ்போர்ட்டையும் உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள்.”

இவ்வாறு மெல்பர்னில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.