யு.எஸ்: முருகனுக்கு காவடி பால்குடத்துடன் டல்லாஸில் பங்குனி உத்திர திருவிழா!

டல்லாஸ்(யு.எஸ்) அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டல்லாஸில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. டி.எஃப்.டபுள்.யூ இந்துக் கோவிலில் உள்ள முருகன் ஆலயத்தில் காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கொண்டாடினர். பங்குனி உத்திரம் அமெரிக்காவிலும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகக் கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் பங்குனி உத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகும். டல்லாஸ் டி.எஃப்.டபுள்.யூ இந்துக் கோவிலில் சனிக்கிழமை காலை சிறப்பு வழிபாடுடன் விழா ஆரம்பமானது., சுமார் 50 பேர் காவடி சுமந்து கோவில் வளாகத்தில்
 


டல்லாஸ்(யு.எஸ்) அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டல்லாஸில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. டி.எஃப்.டபுள்.யூ இந்துக் கோவிலில் உள்ள முருகன் ஆலயத்தில் காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கொண்டாடினர்.

பங்குனி உத்திரம் அமெரிக்காவிலும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகக் கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் பங்குனி உத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகும்.

டல்லாஸ் டி.எஃப்.டபுள்.யூ இந்துக் கோவிலில் சனிக்கிழமை காலை சிறப்பு வழிபாடுடன் விழா ஆரம்பமானது., சுமார் 50 பேர் காவடி சுமந்து கோவில் வளாகத்தில் வலம் வந்து சன்னதியை அடைந்தனர்.

50க்கும் மேலான பெரியவர்களும் சிறுவர்களும் பால்குடம் எடுத்து வந்திருந்தனர். முருகனை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பக்தர் ஒருவர் புல்லாங்குழலில் முருகன் பக்திப் பாடல்களை இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார். தொடர்ந்து முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்துடன் , பங்குனி உத்திர ஸ்பெஷல் பூஜையும் செய்யப்பட்டது.பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. 26 வது ஆண்டாக இங்கு பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

மறு நாள் காலை இர்விங் சிம்மரன் பார்க்கிலிருந்து சுமார் 8 மைல் தொலைவுக்கு பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். பங்குனி உத்திர ஸ்பெஷலாக கடந்த சில ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது.

இர்விங் போலீசார் போக்குவரத்தை நெறிப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகல் செய்திருந்தனர்.. முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை நிறுத்தி பக்தர்கள் கடந்து செல்ல வழி செய்தார்கள்.

கோவிலை அடைந்த குழுவினர் மதிய பூஜையில் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாஷிங்டன் டிசி மற்றும் சான்ஃப்ரான்சிஸ்கோ பகுதியின் கன்கார்டு ஆகிய இடங்களில் முருகன் மூலவராக அமைந்துள்ள ஆலயங்கள் உள்ளன.

டல்லாஸிலும் தமிழ்க் கடவுள் முருகனுக்கு என்று ஒரு கோவில் அமைக்க வேண்டும் என்ற விருப்பங்களும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

டிஎஃப்டபுள்யூ இந்துக் கோவிலில் மாதம் தோறும் கந்தசஷ்டி வழிபாடு, பங்குனி உத்திர விழா, கந்த சஷ்டி விழா என அனைத்தையும் தமிழர்கள் தான் முன்னின்று நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Murugan devotees in Dallas celebrated Panguni Uthiram festival for the 26th year. Pallkudam and Kavadi are the special aspects of this festival. Second day devotees walked about 8 miles from Irving Cimarron Park to the temple. Both the days there were lunch arrangments for the devotees.