கஞ்சா அடிப்பீங்களா? மாத சம்பளம் ரூ 2.25 லட்சம்! குவியும் விண்ணப்பங்கள்!
அமெரிக்கன் மரிஜூவானா என்ற பத்திரிக்கை, கஞ்சா மருத்துவம் பற்றி ஆன்லைனில் தொடர்ந்து ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அப்படி கட்டுரை எழுதுவதற்காக அனுபவ பூர்வமாக கஞ்சா புகையிலையை உட்கொண்டு, நிஜமான அனுபவங்களைச் சொல்லச் சொல்லி அதை எழுதுவதற்காக இந்த நிறுவனம் இப்படியொரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஒரே சோகம் என்னன்னா… இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வசிக்கும் நாட்டில் சட்டப்பூர்வமாக கஞ்சா புகைப்பது தடை செய்யப்பட்டிருக்க கூடாது. அதனால இந்தியாவுல வசிக்கிறவங்க யாரும் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியாது! இந்தியாவிலிருந்து வேற நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். இப்படி இப்பவே உலகம் முழுவதும் இருந்து 4,500 பேர் இந்த வேலைக்காக அப்ளை செய்து விட்டு காத்திருக்கிறார்களாம்.