துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துச் சொன்ன கனிமொழி எம்.பி.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸுக்கு, திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் என்று ஜோ பைடன் அறிவித்தார். இது குறித்த தகவல் வெளியானதும், இந்திய அரசியல்வாதிகளில் முதலாவதாக கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துச் சொன்னவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் கனிமொழி. ஆங்கிலத்தில், ஜோ பைடன் மற்றும் கமலா
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸுக்கு, திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் என்று ஜோ பைடன் அறிவித்தார். இது குறித்த தகவல் வெளியானதும், இந்திய அரசியல்வாதிகளில் முதலாவதாக கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துச் சொன்னவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் கனிமொழி.

ஆங்கிலத்தில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை டேக் செய்து ட்விட்டரில் கனிமொழி கூறியுள்ளதாவது, “ ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபைடன், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது, மிகவும் பெருமை வாய்ந்தது. அமெரிக்க தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கமலா ஹாரிஸுக்கு எனது வாழ்த்துகள். அனைவரையும் இணைத்துச் செல்லும் நடைமுறையை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து, குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க இந்தியர்களில் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அதிபர் ட்ரம்ப்-க்கு ஆதரவு தெரிவிப்பதால், கமலா ஹாரிஸின் தேர்வை வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com