திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் விருது!

வாஷிங்டன்: திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்படுகிறது. 75 ஆண்டுகப்ளாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அமைப்பான மனிதநேயர் சங்கம், மனிதநேயத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. அறிவியல் மனப்பான்மையுடன்உலகெங்கும் மனித நேயத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி வரும் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் கடந்த 66 ஆண்டுகளாக, ஓவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் மனித நேயத்திற்காக பாடுபட்டு வருபவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி சிறப்பு செய்து வருகிறார்கள்.
 

வாஷிங்டன்: திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்படுகிறது.

75 ஆண்டுகப்ளாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அமைப்பான மனிதநேயர் சங்கம், மனிதநேயத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. அறிவியல் மனப்பான்மையுடன்உலகெங்கும் மனித நேயத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி வரும் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் சார்பில் கடந்த 66 ஆண்டுகளாக, ஓவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் மனித நேயத்திற்காக பாடுபட்டு வருபவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி சிறப்பு செய்து வருகிறார்கள்.

2019ம் ஆண்டிற்கான மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட உள்ளது. வாஷிங்டனில் செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறும் ”பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டில்” அவருக்கு வழங்குகிறார்கள். இந்த விருதை, அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குனர் ராய் ஸ்பெக்ஹார்ட் கி.வீரமணிக்கு வழங்குகிறார்.

சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அடைவதிலும், தந்தை பெரியார் வழியில் மேற்கொண்டு ஆற்றிவரும் மனிதநேயத் தொண்டுகளைப் பாராட்டியும் இந்த விருது கி.வீரமணிக்கு வழங்கப்படுகிறது.

ஜேம்ஸ் ராண்டி(James Randi), பால் கர்ட்ஸ் (Paul Kurtz) எர்னி சேம்பர்ஸ் (Ernie Chambers) உள்ளிட்டோர் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து இந்த விருதை முதலாவதாகப் பெறுபவர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றிடவும் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டில் சிறப்புரை ஆற்றவும் கி.வீரமணி சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் அவரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

– வணக்கம் இந்தியா